பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

மராத்தி, பாலி உள்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!

5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது பற்றி...

News image

மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ். - PTI

Updated On :4 அக்டோபர் 2024, 9:37 am IST

மராத்தி, பாலி உள்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கெனவே, தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், ஒடியா, தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

செம்மொழி அந்தஸ்து!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், மத்திய அமைச்சரவையின் முடிவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து கோரி நீண்ட ஆண்டுகளாக மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், மத்திய அமைச்சரவையின் முடிவை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

முதலில் தமிழ்..

முதன்முதலில் கடந்த 2004ஆம் ஆண்டு தமிழ் மொழிக்குதான் செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இறுதியாக ஒடியா மொழிக்கு 2014ஆம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.