மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 205-ஐ எட்டியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிரத்தில் மேலும 2 பேருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது.
தற்போது இந்த தொற்று பாதிக்கப்பட்டு 177 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதில் 20 பேர் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இந்நோய்க்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான பாதிப்புகள் புணேவில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன என்றார்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலும், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலும் அந்தப் பாதிப்பு தீவிரமாக பரவிவருகிறது.
பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக திருவள்ளூரைச் சோ்ந்த 9 வயது சிறுவன் ஜிபிஎஸ் பாதிப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிகழாண்டில் 9,250 பேருக்கு டெங்கு: மூவா் உயிரிழப்பு

காங்கோவில் எபோலா தொற்று பாதிப்பு 2,000-ஐ கடந்தது; 754 போ் உயிரிழப்பு

எச்.டி.எஃப்.சி. வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
விடியோக்கள்

மாதம் ரூ. 2500, 6 சிலிண்டர் குறித்த அறிவிப்புகள் எங்கே? பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி



