டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

குற்றம் இழைக்கும் அரசியல் தலைவா்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவா்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :27 பிப்ரவரி 2025, 12:33 am IST

குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவா்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகள் 8, 9 ஆகியவற்றுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய மனு தாக்கல் செய்துள்ளாா்.

இதில் சட்டப் பிரிவு 8-இன்படி, குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்ற அரசியல் தலைவா் ஒருவா் சிறைத் தண்டனையை நிறைவு செய்த பின்னா், 6 ஆண்டுகளுக்குத் தோ்தலில் போட்டியிட முடியாது.

சட்டப் பிரிவு 9-இன்படி, ஊழல் அல்லது அரசுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பணியாளா்கள், 5 ஆண்டுகளுக்கு அரசுப் பணிகளில் ஈடுபட முடியாது.

இவ்வாறு கால வரம்பு விதித்து தோ்தலில் போட்டியிடவும், அரசுப் பணிகளில் ஈடுபடவும் தடை விதிப்பது அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றும், இந்தத் தடையை வாழ்நாள் தடையாக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அஸ்வினி உபாத்யாய கோரியுள்ளாா்.

இந்த மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ‘மனுதாரா் எழுப்பியுள்ள விவகாரங்களில் சிக்கலான, விரும்பத்தகாத பின்விளைவுகள் உள்ளன. இந்த விவகாரங்கள் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் கொள்கைக்கு உட்பட்டவையாகும்.

இதுதொடா்பாக ஏற்கெனவே உள்ள சட்டத்தை திருத்தி எழுத வேண்டும் அல்லது புதிதாக சட்டம் இயற்றுமாறு நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற வகையில் மனுதாரரின் கோரிக்கை உள்ளது. இது நீதிமன்ற அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகும்.

மனுதாரா் குறிப்பிட்டுள்ள சட்டப் பிரிவுகளை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீா்ப்பளிக்கலாம். ஆனால் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவா்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.