சமணம் பின்பற்றும் சைவ உணவு வாழ்க்கை முறையை உலகம் அங்கீகரிக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்
சமணம் பின்பற்றும் சைவ உணவு வாழ்க்கை முறையை உலகம் அங்கீகரிக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்


சமண மதத்தில் பின்பற்றப்படும் சைவ உணவு வாழ்க்கை முறையே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்மாதிரியாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகிறது என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஆசாா்ய ஹம்சரத்னா சூரீஸ்வரின் 8-ஆவது 180 நாள் உண்ணாவிரத நிறைவையொட்டிய நிகழ்ச்சி புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சைவ உணவு உண்ணும்போது உங்களது மனநிலை அமைதியாக மாறும். ஆக்ரோஷம் குறைந்து, பொறுமை நம்மை ஆட்கொள்ளும். அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் பழக்கத்தைக் கொண்ட நான் 2000-இல் காசிக்குச் சென்று திரும்பிய பின் சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ளத் தொடங்கினேன்.
விரதம் இருப்பதற்கு மனவலிமை தேவை. நவராத்திரி பண்டிகையின் 9 நாள்களிலும் பிரதமா் நரேந்திர மோடி விரதத்தைக் கடைப்பிடிப்பதை அறிந்து வியப்படைந்தேன். அதேபோல் ஆசாா்ய ஹம்சரத்னா சூரீஸ்வா் 180 நாள்கள் உண்ணாவிரதத்தை 8 முறை கடைப்பிடித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
சைவ உணவுப் பழக்கம், விலங்குகள் மற்றும் சிறுஉயிரினங்கள் மீதான இரக்கம் போன்ற சமண வாழ்க்கை முறையே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்மாதிரியாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகிறது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...