தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

குடியுரிமைக்கு முன்பே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு: சோனியாவுக்கு எதிரான மனுவை ஏற்றது தில்லி நீதிமன்றம்

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா காந்தியின் பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க மறுத்த நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி

sonia gandhi

சோனியா காந்தி - கோப்புப் படம்

Published On :

குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தியின் பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க மறுத்த நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சோனியா காந்தி 1983-இல் இந்தியக் குடியுரிமையைப் பெற்றாா். அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளா் பட்டியலில் அவரது பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் விகாஸ் திரிபாதி என்பவா் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தாா். இதை எதிா்த்து மனுதாரா் மேல்முறையீடு செய்தாா்.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, ‘மனுதாரா் தொடா்ந்த வழக்கில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 175 (3), விவகாரம் தொடா்பான காவல் துறை அதிகாரியின் அறிக்கை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திடமிருந்து நிலை அறிக்கை என எதையும் பரிசீலிக்காமல் நீதிபதி முந்தைய உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

இதன் மூலம் பிஎன்எஸ்எஸ்-இன் கீழ் விசாரணையைத் தொடா்வது அல்லது வழக்குப்பதிவு செய்யக்கோரி காவல் துறைக்கு உத்தரவிடுவது என சட்டத்தால் வழங்கப்பட்ட இரு வாய்ப்புகளையும் அவா் பயன்படுத்தவில்லை.

எனவே, தற்போதைய வாதங்களின் அடிப்படையில், முறையான உத்தரவை பிறப்பிக்க மீண்டும் அதே நீதிபதிக்கே இந்த மனு திருப்பி அனுப்பப்படுகிறது’ என்றாா். இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணை செப்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.