தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு தொடர்பாக...

நடிகர் டெல்லி கணேஷ் (கோப்புப்படம்)

Updated On :

நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று(நவ. 9) காலமானார்.

நடிகர் டெல்லி கணேஷின் உடல் ராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில்பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி கணேஷின் திரையுலக வாழ்க்கை

நாடகத்துறையில் இருந்து பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் டெல்லி கணேஷ். தொடர்ந்து பசி, அபூர்வ சகோதரர்கள், தாயா தாரமா, மனிதன், நாயகன், சிந்து பைரவி, அவ்வை சண்முகி, ஆஹா, லண்டன், மாசிலாமணி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

நகைச்சுவை, வில்லன், குணசித்திரம் என பன்முக பாத்திரங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். மர்மதேசம், வீட்டுக்கு வீடு லூட்டி, மனைவி, இப்படிக்குத் தென்றல் உள்ளிட்ட சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு 1979 ஆம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதும், 1993-94 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் கிடைத்தது.

சமீபத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் டெல்லி கணேஷுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.