மகாராஷ்டிரம், தாணேயில் தன் மனைவியைத் துன்புறுத்தியவரைத் திட்டமிட்டு கொலை செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜன.11 சுகந்த் ஷத்ருகனா பரிதா (29) என்பவர் நரேஷ் ஷம்பு பகத் வீட்டில் உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவரது உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக உடல் உபாதைகளால் எதிர்பாராமல் அவர் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது.
பகத் மீது சந்தேகித்த காவல்துறையினர் திடுக்கிடும் தகவல்களைக் கண்டறிந்தனர். கொலை செய்யப்பட்ட சுகந்த அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வந்து தனது மனைவியைத் துன்புறுத்தியதாக பகத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால் சுகந்த் மற்றும் பகத் இடையே மட்டுமல்லாமல் பகத் மற்றும் அவரது மனைவிக்குமிடையேயும் பிரச்னைகள் எழுந்துள்ளன. இதனால் அவரைக் கொலை செய்ய பகத் திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஜன.10 சுகந்த்தை தனது வீட்டிற்கு அழைத்த பகத், அவரை மது அருந்தச் செய்து பின் அவரது தலையில் சுத்தியல் மற்றும் இரும்புக் கம்பியால் அவரைத் தொடர்ந்து தாக்கியதாக கூறியுள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தவுடன் அவரே காவல்துறைக்கு தகவலும் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரிவு 103ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026

ராதாபுரம் அருகே சொத்துத் தகராறில் தொழிலாளி கொலை: சகோதரா் கைது

வார பலன்கள் (ஜூலை 17 - 23) சிம்மம்
மெல்லிசையின் ராஜகுமாரி!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



