அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

வீட்டுக்குள் லட்சுமி கடாட்சம் தாண்டவம் ஆட வேண்டுமா?

வீட்டுக்குள் லட்சுமி கடாட்சம் பெருக, இணையத்தில் பேசப்படும் சில பொருள்களைப் பற்றி..

<P>People buying Ugadi pickle and pooja ingredients ahead of the festival in Vijayawada, on Wednesday. Express photo by Prasant Madugula</P>

பூஜை பொருள்கள் - Center-Center-Vijayawada

Published On :

பொதுவாகவே வீட்டை சுத்தமாகவும் எப்போதும் காற்றும், வெளிச்சமும் நிறைந்தபடி வைத்துக்கொண்டாலே, வீட்டுக்குள் லட்சுமி கடாட்சம் வந்துசேரும் என்பது மக்களின் நம்பிக்கை.

அதற்கேற்பவே, வாரத்தில், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்வது, விளக்கேற்றுவது, பண்டிகை நாள் என்றால், வீட்டை தோரணங்களால் அலங்கரித்து வைப்பது, விளக்கேற்றிய பிறகு வீட்டின் வாயில் கதவை மூடக் கூடாது என்று சொல்லும் நம்பிக்கைகளும் இணைந்து கொண்டன.

தற்போது வீட்டுக்குள் நேர்மறையான ஆற்றலைக் கொண்டு வரலாம் என்று இணையங்களில் பல பொருள்கள் விற்பனையாகி வருகின்றன.

பலருக்கும் தெரிந்த சிரிக்கும் புத்தர் சிலைகள் இதில் முதலிடத்தில் உள்ளன. பெரிய பெரிய வீடுகளில், வரவேற்பறையின் ஒரு மூலையில் மிகப்பெரிய சிரிக்கும் புத்தர் சிலை அழகாக நின்றுகொண்டு நம்மை வரவேற்பதைப் பார்த்திருப்போம்.

சிலர், இதனை வாஸ்துப்படியும் வாங்கி வைத்திருக்கிறார்கள். வீட்டில் மகிழ்ச்சியும் இன்பமும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையோடும் சிலர் வாங்குகிறார்கள்.

அடுத்த இடத்தில், 7 நிறங்களைக் கொண்ட கிரிஸ்டல் மரமும் ஒன்று. வண்ண வண்ண நிற கற்களால் நவீனமாக வடிவமைக்கப்பட்ட இந்த கிரிஸ்டல் மரத்தை பலரும் அலங்காரத்துக்காகவும், லட்சுமி கடாட்சம் பெருகும் என்ற நம்பிக்கைக்காகவும் வாங்கிச் செல்கிறார்கள். புதிதாக வீடு வாங்கியவர்களுக்கான பரிசுப் பொருள்களிலும் இது இடம்பெற்றுள்ளது.

பூஜை அறைக்கான வாசனைப் பொருள்களை வாங்கி வந்து முறைப்படி அதனைப் பயன்படுத்துவதும் ஒரு நல்ல முறையாக உள்ளது. வீட்டில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும். ஏலக்காயை மாலையாகக் கட்டி மகாலட்சுமி படத்துக்கு போடுவது மிகவும் நல்லது. செல்வ வளம் பெருகும் என்பதும் நம்பிக்கை.

பலரும், பித்தளை கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி அதில் மலர்களைப் போட்டு வைப்பது நறுமணத்தை சேர்ப்பதோடு, வீட்டில் ஒரு நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும், பார்க்கும்போது மனம் மகிழும் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.