புதுசு கண்ணா புதுசு! ஆவின் கேரட் மைசூர்பா!

ஆவின் நிலையங்களில் பால்கோவா, முந்திரிகேக் உட்பட மொத்தம் 42 வகையான இனிப்பு வகைகளை தரமான நெய்யில் தயாரிக்கப்பட்டு மலிவு விலையில் விற்பனைக்குத் தருகிறது ஆவின்.
AVIN CARROT GHEE MYSOREPA
AVIN CARROT GHEE MYSOREPA
Published on
Updated on
1 min read

பாக்கெட் பால் விற்பனையில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று பால் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஆவின் நிறுவனம். விற்பனைக்குப் போக எஞ்சிய பாலில் இனிப்பு வகைகளைத் தயாரித்து ஆவின் விற்பனை நிலையங்களில் விற்பது வாடிக்கை. கடந்தாண்டு தீபாவளிக்கு 23 டன் இனிப்புகளை விற்று சாதனை படைத்திருந்த சேலம் ஆவின் நிறுவனம் இந்தாண்டும் அதே உத்தியைக் கையாண்டு 40 டன் இனிப்புகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ஆண்டு சில புதிய இனிப்புகளையும் சேலம் ஆவின் தனது பட்டியலில் இணைத்திருக்கிறது. அதில் கேரட் மைசூர் பாகும், ஆவின் நெய் லட்டும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் முற்றிலும் பசும்பாலில் இருந்து பெறப்பட்ட நெய்யினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக சேலம் ஆவின் நிறுவன தலைவர் மற்றும் மேலாளர் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி தோறும் இனிப்பகங்கள் அனைத்திலும் புதிய இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம் தான். அந்த வகையில் இம்முறை சேலம் ஆவின் நிறுவனம் ‘கேரட் மைசூர்பாகு எனும் புதிய இனிப்பு வகையை அறிமுகம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

இவை தவிர, ஆவின் நிலையங்களில் பால்கோவா, முந்திரிகேக் உட்பட மொத்தம் 42 வகையான இனிப்பு வகைகளை தரமான நெய்யில் தயாரிக்கப்பட்டு மலிவு விலையில் விற்பனைக்குத் தருகிறது ஆவின். விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் பால் விவசாயிகளுக்கும் பங்கு தரப்படவிருப்பதாக ஆவின் நிறுவன மேலாளர் தகவல்.

பால் உபபொருட்கள் மூலமாக மட்டும் ஆண்டிற்கு ரூ 600 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்து வருகிறது சேலம் ஆவின் நிறுவனம். இங்கு தயாரிக்கப்படும் இனிப்புகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட மொத்தம் 600 இடங்களுக்கு அனுப்பப் படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com