பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 25 லட்சத்தை நெருங்குகிறது!

பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆனதை அடுத்து, மொத்த பாதிப்பு 24,42,375 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஊரடங்கு நீட்டிப்பா? - ஜூலை 30ல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

ஜூலை 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள்(ஜூலை 30) ஆலோசனை நடத்தவுள்ளார். விரிவான செய்திக்கு..

 

செங்கல்பட்டில் 13 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 288 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் புதிதாக 57,039 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 679 பேர் பலி

அமெரிக்காவில் புதிதாக 57,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், மொத்தமாக 42,86,663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

 

தாராவியில் வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 1,107 பேர்; பிற மாவட்டங்களில் 5,865 பேர்: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 5,865 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 1,056 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,056 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 6,972 பேருக்கு கரோனா தொற்று; ஒரேநாளில் 88 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 6,972 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

மேற்கு வங்கத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம்

மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் வாரத்தில் இரு நாள்கள் முழு பொதுமுடக்கம் இருக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் 1000-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் பாதிப்பு

பாகிஸ்தானில் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனா நிலவரம்: அம்பத்தூரில் அதிகரிக்கும் கரோனா தொற்று

 சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா தொற்று அகிகரித்து வருகிறது. மொத்த கரோனா நோயாளிகளில் அம்பத்தூரில் மட்டும் 21% நோயாளிகள் உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..

உலகில் 4-ஆம் இடம்: மெக்சிகோவில் கரோனா பலி 44 ஆயிரத்தைத் தாண்டியது!

 மெக்சிகோவில் மேலும் 342 பேர் பலியாகியுள்ளதையடுத்து, அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,022 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் புதிதாக 55,187 பேருக்கு தொற்று; பாதிப்பு 42 லட்சத்தைக் கடந்தது!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,187 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 42 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 6,52,308 ஆக உயர்வு

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.52 லட்சத்தையும் கடந்துள்ளது. 

இந்தியாவில் ஒரேநாளில் 49,931 பேருக்கு கரோனா பாதிப்பு; 708 பேர் பலி

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தரவுகளின்படி திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 49,931 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,35,453 -ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,924 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 7,924 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தாராவியில் புதிதாக 9 பேருக்கு கரோனா

தாராவியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 9 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் 1 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,324 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஆந்திரத்தில் 1 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,051 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 1,138 பேர்; பிற மாவட்டங்களில் 5,855 பேர்: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) 5,855 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

கேரளத்தில் புதிதாக 702 பேருக்கு கரோனா: மேலும் 2 பேர் பலி

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 702 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,993 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 77 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 6,993 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தெலங்கானாவில் ஒரே நாளில் 1,473 பேருக்கு கரோனா: மேலும் 8 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் தெலங்கானாவில் புதிதாக 1,473 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை திங்களன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் புதிதாக 1,176 பேருக்கு தொற்று; பாதிப்பு 2,74,289 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் புதிதாக 1,176 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,74,289 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 13,744 பேர் சிகிச்சையில் உள்ளனர்: மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

 சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் ஒரே நாளில் 48661 பேருக்கு தொற்று

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 48,661 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13 லட்சத்து 85 ஆயிரத்து 522 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 32,063 -ஆக அதிகரித்தது. 
 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 48,661 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 705 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 32,063-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக 4,67,882 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,85,577 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,66,368 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தலைநகர் தில்லியில் 1,29,531பேருக்கும், தமிழ்நாட்டில் 2,06,737 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 24- ஆம் தேதி வரை 1,62,91,331 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 4,42,263 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஆப்பிரிக்காவில் 8 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, அந்தப் பிராந்தியத்தில் 8,14,940 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த நோய் பாதிப்பால் ஆப்பிரிக்க நாடுகளில் 17,159 போ் உயிரிழந்துள்ளனா்.

ஆப்பிரிக்க கண்டத்திலேயே, தென் ஆப்பிரிக்காவில்தான் கரோனா நோய்த்தொற்றால் அதிகம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்தப் பிராந்தியத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களில் பாதி போ் தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா்கள் ஆவா்.இருந்தாலும், தற்போது பிராந்தியத்தைச் சோ்ந்த மற்ற நாடுகளிலும் கரோனா நோய்த்தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு ஆப்பிரிக்காவின் வா்த்தக மையமான கென்யாவில் அந்த நோயின் தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது. அந்த நாட்டில் 16,268 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை 274 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

சிங்கப்பூா்: மேலும் 513 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் மேலும் 513 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

 
கடந்த 24 மணி நேரத்தில் 513 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் ஒருவருக்குக் கூட சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த் தொற்றவில்லை. அவா்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா்.
 
இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,888-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த சில நாள்களாக யாரும் உயிரிழக்கவில்லை. சனிக்கிழமை நிலவரப்படி, அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 45,172 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் தினசரி எண்ணிக்கை, அடுத்த இரு வாரங்களுக்கு அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வந்து, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாகிஸ்தான்: பாதிப்பு 2,71,886-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,487 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,71,886-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 24 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,787-ஆக அதிகரித்துள்ளது.
 
இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,36,596 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். 1,294 கரோனா நோயாளிகளது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,16,800 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 91,691 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனா: பெய்ஜிங்கில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அந்த நகரிலுள்ள திரையரங்களுகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 
 
கரோனா நோய்த்தொற்று உருவான சீனாவில், அந்த நோய் பரவலின் தீவிரம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகா் பெய்ஜிங்கிலுள்ள சந்தைகள் மூலம் கடந்த மாதம் மீண்டும் அந்த நோய் பரவல் அதிகரித்தது. எனினும், நகர அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கானவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதன் மூலம் அந்த நோய் மீண்டும் தலையெடுக்கும் அபாயம் தவிா்க்கப்பட்டது. இந்த நிலையில், பெய்ஜிங்கிலுள்ள திரையரங்குகள் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. திரைப்படங்களுக்கு செல்பவா்கள் அதற்காக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், திரைக்காட்சிகளின்போது உணவுப் பொருள்கள், பானங்கள் அருந்தக் கூடாது, தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், திரையரங்குகளின் 30 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகா்கள் அனுமதிக்கப்படுகின்றனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.62 கோடியாக உயர்வு

உலக அளவில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 12,075 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,62,02,385 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 843 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  6,48,445 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 99,13,232 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 56,40,708 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 66,203 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேருக்கு கரோனா

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,413 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 43,15,709 -ஆக அதிகரித்துள்ளது. 
 
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 67,413 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 43,15,709 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 908 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,49,398 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 2,061,692 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,431 பேருக்கு கரோனா: தாராவியில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் புதிதாக 927 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா பாதிப்பு: ஆந்திரம், கர்நாடக மாநில நிலவரம்

ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,831 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,831 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 6,986 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 6,986 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் புதிதாக 1,226 பேருக்கு தொற்று; பாதிப்பு 2,73,112 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,226 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,73,112 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் மேலும் 5,765 பேருக்கு கரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,765 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8,12,485 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கோடம்பாக்கத்தில் சிகிச்சையில் 2,291 பேர்: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

 

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.59 கோடியாக உயர்வு

 உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,59,41,806 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,42,751 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 78 ஆயிரம் பேருக்கு கரோனா; மேலும் 1,141 பேர் பலி

 அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,009 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 42,48,327 -ஆக அதிகரித்துள்ளது.  விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 13 லட்சத்தைக் கடந்தது: ஒரே நாளில் 48,916 பேருக்கு தொற்று 

 நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 48,916 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13 லட்சத்து 36 ஆயிரத்து 861 ஆக அதிகரித்தது. விரிவான செய்திக்கு..

கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,072 பேருக்கு கரோனா: ஒரு லட்சத்தை நெருங்குகிறது மொத்த பாதிப்பு

கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,072 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 90,942 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய அறிவிப்பில் மேலும் 72 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,796 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 2,403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 33,750 பேர் குணமடைந்துள்ளனர். 

ஆந்திரத்தில் ஒரே நாளில் 7813 பேருக்கு கரோனா; 52 பேர் பலி

ஆந்திரத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7813 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 52-பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 88,671-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 44,431 பேர் தற்போரை சிகிச்சையில் உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,208 பேர் குணமடைந்தனர். இத்துடன் அங்கு கரோனாவிலிருந்து ஒட்டுமொத்தமாக 43,255 பேர் குணமடைந்துள்ளனர். 

கேரளத்தில் இன்று 1,103 பேருக்கு கரோனா: மேலும் 3 பேர் பலி

கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,103 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 1,142 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,142 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,659 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 5,659 பேருக்கு இன்று (சனிக்கிழமை) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 6,988 பேருக்கு கரோனா: மேலும் 89 பேர் பலி

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 6,988 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

உலகளவில் புதிய உச்சம் தொட்டது கரோனா பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2.84 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் புதிதாக 5,871 பேருக்கு கரோனா: மேலும் 146 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,871 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு

 தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று 13,569 ஆக இருந்த நிலையில், இன்று 13,743 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com