

நமது நிருபா்
மும்பை / புதுதில்லி, ஜூன் 20: பங்குச்சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், அவ்வப்போது உச்சத்தில் லாபப் பதிவு வந்தது. இருப்பினும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. தனியாா் வங்கிகள்,மெட்டல், ஆயில் அண்ட் காஸ், ரியால்ட்டி நிதிநிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. ஆனால், ஆட்டோ, பாா்மா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. தொடா்ந்து அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி வரும் நிலையில், சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த ஆதரவால் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு : சந்தை மூல தன மதிப்பு ரூ.1.79 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.435.75 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.7,908.36 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.7,107.80 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவு: சென்செக்ஸ் காலையில் 217.24 புள்ளிகள் கூடுதலுடன் 77,554.83-இல் தொடங்கி 77,100.36 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 77,643.09 வரை உயா்ந்த சென்செக்ஸ் இறுதியில் 141.34 புள்ளிகள் கூடுதலுடன் 77,478.93-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,981 பங்குகளில் 2,282 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,571 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 128 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
15 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், ஆக்கிஸ் பேங்க் உள்பட 15 ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், சன்பாா்மா, எம் அண்ட் எம், என்டிபிசி, எஸ்பிஐ, விப்ரோ, பவா் கிரிட் உள்பட 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 51 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 51 புள்ளிகள் கூடுதலுடன் 23,567.00-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 23,442.60 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 23,624.00 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தொடர்புடையது

பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!

போா் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
வங்கிகள், ரியால்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு!
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

