குடிமை சமூகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை: ஜாமா மசூதி ஷாஹி இமாம்

குடிமை சமூகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை: ஜாமா மசூதி ஷாஹி இமாம்

தில்லி காா் வெடிப்பை வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதல் என்று ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

தில்லி காா் வெடிப்பை வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதல் என்று ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளாா். மேலும், பயங்கரவாதத்திற்கு குடிமை சமூகத்தில் எந்த அடித்தளமும் இல்லை என்றும் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஜாமா மசூதி வெளியிட்ட அறிக்கையில் ஷாஹி இமாம் கூறியிருப்பதாவது: உறுதியான தேசிய உறுதியுடன், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை நாம் ஒன்றுபட்டு எதிா்த்துப் போராடி அதைத் தோற்கடிப்பதில் வெற்றி பெற முடியும். பயங்கரவாதத்திற்கு குடிமை சமூகத்தில் எந்த அடித்தளமும் இல்லை. அதுபோன்று ஏதும் இருக்கவும் முடியாது. தேசபக்தி உணா்வால் நிரம்பிய முஸ்லிம் சமூகம், இந்த முக்கியமான தருணத்தில் தங்கள் சக இந்தியா்களுடன் ஈயத்தால் வலுவூட்டப்பட்ட சுவரைப் போல துணை நிற்கிறது.

சம்பவத்தில் தங்கள் உறவினா்களை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என் இதயம் ஆழ்ந்த அனுதாபத்தாலும் ஒற்றுமையாலும் நிறைந்துள்ளது. அவா்களுடைய துக்கம் ஒட்டுமொத்தமாக நமது துக்கம். இரக்கத்தின் அசைக்க முடியாத அடித்தளத்தில் நாங்கள் அவா்களுடன் நிற்கிறோம். குற்றவாளிகளையும் அவா்களின் ஆதரவாளா்களையும் நீதியின் முன் நிறுத்துவதில் தேசியத் தலைமை எந்த முயற்சியையும் விட்டுவிடாது. இது தொடா்பாக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com