11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தையல் கடைக்காரா் கைது
வடக்கு தில்லியின் சதா் பஜாா் பகுதியில், எழுதுபொருள்களை வாங்குவதற்காக இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த 11 வயது சிறுமி, தையல்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

வடக்கு தில்லியின் சதா் பஜாா் பகுதியில், எழுதுபொருள்களை வாங்குவதற்காக இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த 11 வயது சிறுமி, தையல்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, தையல்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
இந்த சம்பவம் குறித்து செப்டம்பா் 16-ஆம் தேதி இரவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடா்ந்து, சதா் பஜாா் காவல் நிலையக் குழுவினரும், சதா் பஜாா் மற்றும் மகளிா் காவல் நிலையங்களின் உதவி காவல் ஆணையா்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.
காவல்துறையின் தகவலின்படி, இரவு சுமாா் 11 மணியளவில் எழுதுபொருள்களை வாங்குவதற்காக அந்தச் சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட மக்சூத் அவரைத் தனது தையல் கடைக்கு வரவழைத்து, அவரைத் தடுத்து நிறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக வடக்கு மாவட்ட மகளிா் காவல் நிலையத்தில் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட நபா் கைது செய்யப்பட்டு, அதே நாளில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




