மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

மனசுக்குள்ளே ஒரு ஜென் பயணம்!

ஜென் குறித்து உணர்ந்தவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு மீள் பதிவை வாசிப்பதாக அமையும்; ஜென் குறித்து அறியாதவர்களுக்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துதலாக அமையும்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2026, 6:58 pm IST

மனசுக்குள்ளே ஒரு ஜென் பயணம்! - ந. ஸ்ரீதர்; பக். 224; ரூ. 230; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017. ✆ 044- 2434 2926.

ஜென் தத்துவம் என்பது எளிமையானது; ஆனால், ஆழமானது. குருவின் வழிகாட்டுதலுடன் இந்த ஜென் தத்துவத்தை நாம் பயிற்சி செய்து அதன் சாராம்சத்தை உணர்ந்து, அதை அனுபவித்து வரும்போது கிடைக்கும் ஆனந்தம் எதற்கும் ஈடில்லாதது.

மனதைக் கட்டுப்படுத்த முடியாது. அதைப் பிடிக்க நினைத்தால் அது ஓடிவிடும்; அடக்க நினைத்தால் மீறிவிடும். ஆனால், அதை நாம் கவனித்தால் அப்படியே நிற்கும்; நின்ற மனது மூச்சை நீளமாக்கி, ஆழமாக்கும்; அந்த மூச்சுதான் நம்மை அக்கணப் பொழுதில் வாழ வைக்கும். இந்த விளக்கங்கள் எல்லாம் இந்த நூலை வாசிக்கும்போது நமக்குப் புலப்படும்.

நமது மனது ஒரு 'மடிக்கணினி' என்றால், நமது ஆழ்மனம் 'நாசாவின் சூப்பர் கம்ப்யூட்டர்' என ஆழ் மனதும் உள்ளுணர்வும் குறித்து எளிமையாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் ஜென் குறித்த கருத்துகளை எடுத்தியம்புகிறார் அவர்.

மூச்சை உள்ளிழுக்கும்போது நல்லவற்றை உள்ளிழுத்து, வெளியேற்றும்போது அல்லவற்றை வெளியேற்றுவது என்ற உச்சபட்ச ரகசியம் சாதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஹார்மோன்களையும் அதன் செயல்பாடுகளையும் ஓர் அரசுடன் ஒப்பிட்டு அதன் துறைகளுடன் இணைத்து விவரித்து இருக்கும் விதம் அற்புதம்.

ஓர் அத்தியாயத்தை நாம் வாசிக்கும்போது நாமாகவே சற்று நிறுத்தி சற்று மனத்தைக் கவனிக்கத் தொடங்குகிறோம். பின்பு தொடர்ந்து வாசிக்கும்போது, அந்த இடத்தில் ஆசிரியர் நம்மை 'இப்போது வாசிப்பை நிறுத்தி சற்று ஓய்வு எடுங்கள்' என்று பதிவிட்டிருப்பது வியப்பாக இருக்கிறது.

ஜென் குறித்து உணர்ந்தவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு மீள் பதிவை வாசிப்பதாக அமையும்; ஜென் குறித்து அறியாதவர்களுக்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துதலாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.