தொடர் சர்ச்சையில் தவெக எம்எல்ஏக்கள்! முதல்வரை சந்தித்த பெண் எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்!!தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்குகோர முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்புமாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

இன்று நல்ல நாள்!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம்.

Astro

Updated On :

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

26 ஏப்ரல் 2025 (சனிக்கிழமை)

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பூர்வ புண்ணி சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும் வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சந்திரன், புதன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கன்னி:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன், சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- அயன, சயன, போக ஸ்தானத்தில் - புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல் கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

தனுசு:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன், குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் ராஹு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். அத்துடன் பணம் வரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மகரம்:

கிரகநிலை:

ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கி டையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும். செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.