டார்வின் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் - வங்கதேச வீரர் மெஹிதி ஹாசனுக்கு சிறிய மோதல் ஏற்பட்டது. ரன் ஓடும்போது இருவரும் மோதிக்கொண்டதால் அது வாக்குவாதமாக மாறியது.
டார்வினில் நேற்று (ஆக.13) தொடங்கிய முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இதில் 198 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.
அடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் முதல் நாளில் 96/1 ரன்களைச் சேர்த்தது. தற்போது, இரண்டாம் நாள் முடிவில் 110 ஓவர்கள் முடிவில் 351/6 ரன்கள் குவித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். அவரது 21ஆவது ஓவரில் வங்கதேச வீரர் மெஹிதி ஹாசன் மிராஜ் உடன் மோதல் ஏற்பட்டது.
ரன் ஓடும்போது இருவரும் மோதிக்கொண்டதால் அது வாக்குவாதமாக மாறியது. இதில், மிட்செல் ஸ்டார்க், “இது என்னுடைய ஓடுபாதை; நீ ஏன் குறுக்கே வருகிறாய். ஆடுகளத்தை தாண்டி ஓடு” எனக் கூற, அது வாக்குவாதமாக மாறியது. பின்னர், நடுவர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.
வங்கதேச அணி இரண்டு நாள்களில் வலுவான நிலையில் இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் தற்போது 153 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
"Get off the wicket!"
— cricket.com.au (@cricketcomau) August 14, 2026
Mitchell Starc and Mehidy Hassan Miraz had a heated exchange in #AUSvBAN: https://t.co/854LsTds7l pic.twitter.com/fTJtsn4px8
Summary
Tensions are flaring in the middle..! Mitchell Starc vs Mehidy Hassan Miraz Few words exchanged
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சினிமாவில் பிறந்த ஜென் ஸி தலைமுறையில்... நன்றி சொன்ன கமல் ஹாசன்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!

திரைத்துறையில் 67 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கமல் ஹாசன்!

கபில் தேவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



