
மிரட்டும் சோனல் தினுஷா..! இந்தியாவின் வெற்றி வாய்ப்பில் சிக்கல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் அபாரமான பேட்டிங் குறித்து...

இலங்கை வீரர் சோனல் தினுஷா - படம்: ஏபி
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் அபாரமான பேட்டிங்கினால் இந்தியாவில் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 503/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவைவிட 200 ரன்கள் குறைவாக இருப்பதால் இலங்கை அணி ஃபாலோ ஆன் விதியின்படி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட ஷுப்மன் கில் பணித்தார்.
தற்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்தால் நாள் தேநீர் இடைவேளை வரைக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்கள் குவித்துள்ளது.
இதில் பசிந்து சூரியபந்த்ரா 92 ரன்கள் எடுத்து நேற்று ஆட்டமிழந்தார். இன்று சோனல் தினுஷா இந்திய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார். 195 பந்துகளில் 98 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
இந்தியாவின் வெற்றி வாய்ப்பை சோனல் தினுஷா தனியாளாகத் சிதைத்து வருகிறார். கடைசி செஷனில் இந்தியா 2 விக்கெட்டுகளை எடுத்து இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை சேஸ் செய்ய வேண்டும். தற்போது, இலங்கை 170 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறது.
After Travis Head, now Sonal Dinusha is the new headache for Team India ð¤ª
— Ajay Jadeja (@AjayJadeja171) August 27, 2026
Sonal has smashed 363* runs in just 2 matches vs India and still batting continues....
A new star is born ð±ð° pic.twitter.com/EeTbvRMqMr
Summary
The dazzling Sonal Dinusha...! India's chances of victory in jeopardy!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





