மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி

15 வயதில் கேப்டன்... டி20 கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்த சூர்யவன்ஷி!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி குறித்து...

Vaibhav Sooryavanshi

வைபவ் சூர்யவன்ஷி - படம்: பிசிசிஐ டொமஸ்டிக்

Updated On :

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மிகக் குறைந்த வயதில் கேப்டன் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பிகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி தனது 14 வயதில் முதன்முதலில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கவனம் பெற்றார். பின்னர், குறைந்த வயதில் இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தினார்.

தற்போது, சையத் முஷ்டக் அலி தொடரில் பிகார் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். 15 வயதில் கேப்டனாகி வரலாறு படைத்துள்ளார்.

தனது முதல் போட்டியில் சௌராஷ்டிராவை பிகார் அணி தலைமையிலான சூர்யவன்ஷி எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிகார் 137/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கேப்டன் சூர்யவன்ஷி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ப்ருத்விராஜ் அதிகபர்சமாக 38 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய சௌராஷ்டிரா 16.3 ஓவர்களில் 138/5 ரன்கள் எடுத்து வென்றது.

இதில் அதிகபட்சமாக் ஹர்வன்ஷ் சிங் 33 ரன்கள் எடுத்தார். சேத்தான் சக்காரியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக டி20 வரலாற்றில் குரோஷியாவின் சாக் வுகுசிக் (17 ஆண்டுகள் 311 நாள்கள்) 17 வயதில் டி20 கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது சூர்யவன்ஷி (15 ஆண்டுகள் 232 நாள்கள்) இதனை முறியடித்துள்ளார்.

Summary

15-Year-Old Vaibhav Sooryavanshi Becomes Youngest T20 Captain Ever

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.