ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவைச் சந்தித்த விராட் கோலி, ரோஹித் சர்மா!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய வீரர்கள் சரிவை சந்தித்துள்ளதைப் பற்றி...

விராட் கோலி - ரோஹித் சர்மா. - படம்: ஏபி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சரிவை சந்தித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று (நவ. 18) வெளியிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்தத் தொடரில் ஒரு அரைசதம் (74 ரன்கள்) உள்பட 4 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 86 ரன்கள் மட்டுமே எடுத்து தொடர்நாயகன் விருதை வென்றார்.
இந்த நியூசிலாந்து தொடரில் விராட் கோலியைத் தவிர்த்து இந்திய வீரர்கள் யாரும் ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை. இது ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலிலும் எதிரொலித்தது.

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 35 புள்ளிகளை இழந்திருந்தாலும் 806 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். 778 புள்ளிகளுடன் டேரில் மிட்செல் 2-ஆவது இடத்திலும், 24 புள்ளிகளை இழந்த விராட் கோலி 857 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரன் ஒரு இடம் முன்னேறி 752 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, 38 புள்ளிகளை இழந்து 4-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார்.
அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் 99 பந்துகளில் 121 ரன்கள் குவித்து 2-ஆவது ஒருநாள் சதத்தை நிறைவு செய்த இங்கிலாந்து வீரர் டாம் பாண்டன், 34 இடங்கள் முன்னேறி 13-ஆவது இடத்தில் உள்ளார்.
Summary
Indian players Virat Kohli and Rohit Sharma have seen a decline in the latest ODI rankings released by the International Cricket Council (ICC).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

