2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!நிலவு தோன்றி மறையும் அழகிய விடியோ பகிர்ந்தார் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி!!வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்தது! என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு உறவு?எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்: டாம் லாதம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

Glenn Phillips

கிளன் பிலிப்ஸ் - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், நாளை (நவம்பர் 27) கிறிஸ்ட் சர்ச்சில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில மாதங்களாக நியூசிலாந்து அணிக்காக கிளன் பிலிப்ஸ் மிகவும் நன்றாக விளையாடி வருவதாக நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் முக்கியமான வீரராக மாறியுள்ளார். பந்துவீச்சிலும் அவர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமின்றி, வெள்ளைப் பந்து போட்டிகளிலும் அவர் அணிக்கு முக்கியமான வீரர். ஆட்டத்தை நன்கு புரிந்துகொண்டு விளையாடக் கூடிய அவரைப் போன்ற வீரர் அணியில் இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றார்.

நியூசிலாந்து அணிக்காக இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிளன் பிலிப்ஸ் 1100 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 39.28 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 66.30 ஆகவும் உள்ளது. அதில் இரண்டு சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். அவர் 36 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த ஆண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிளன் பிலிப்ஸ் 81.25 என்ற சராசரியுடன் 325 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

New Zealand captain Tom Latham has stated that all-rounder Glenn Phillips has emerged as a key player in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.