வங்கதேசத்துக்கு எதிரான தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் விலகல்!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

ஜெரால்டு கோட்ஸீ - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
வங்கதேச அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் ஜெரால்டு கோட்ஸீ மற்றும் குவெனா மாபாகா விலகியுள்ளனர்.
Squad Update: Bangladesh White Ball Tour ð¨
— Proteas Men (@ProteasMenCSA) November 26, 2026
Seam bowlers Gerald Coetzee and Kwena Maphaka have been ruled out of the upcoming white-ball tour against Bangladesh due to injury.
Coetzee, who was named in both the One-Day International (ODI) and T20 International (T20I) squads,⦠pic.twitter.com/f3X8bpJiiw
காயம் காரணமாக விலகியுள்ள ஜெரால்டு கோட்ஸீ மற்றும் குவெனா மாபாகாவுக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் டியான் வான் ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் ஈதன் பாஷ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜேஜே பாஸன் டி20 தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஒருநாள் தொடர் வருகிற டிசம்பர் 10 தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
South African fast bowlers have withdrawn from the ODI and T20 series against Bangladesh due to injuries.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


