நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

அரசியல் காரணங்களால் ரூ.190 கோடி இழப்பைச் சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஏற்படும் வருமான இழப்பு குறித்து...

Logo of the Sri Lanka Cricket Board

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இலச்சினை. - படம்: எக்ஸ் /

Published On :

ஐசிசியில் அறிமுக மகளிர் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை இழந்ததால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு 20 மில்லியம் அமெரிக்க டாலர் வருமான இழப்பு ஏற்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.188 கோடி இழப்பு ஏற்படுமென இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2024-ல் ஏற்பட்ட அரசியல் காரணங்களால் ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக மகளிருக்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இந்தப் போட்டிகள் அடுத்தாண்டு பிப்.14 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இலங்கையில் நடைபெற இருந்த போட்டிகள் தற்போது இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்தப் போட்டிகள் மும்பை மற்றும் வதோராவில் நடைபெற இருக்கின்றன. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யாததால் இந்த மாற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 நாடுகள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியை நடத்தும் பணிகளுக்கான ஏற்பாடுகளை இலங்கை வாரியம் நடத்த ஏற்பாடுகள் செய்யவில்லை என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பிரகாஷ் ஷாஃப்டர் கூறியிருப்பதாவது:

போட்டியை நடத்துவதற்கான போட்டிக்கட்டணம் கொடுக்கப்பட இருந்தது. 2 மில்லியன் டாலர் என நம்புகிறேன். அதே சமயத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் தொடக்கத்தில் இருந்து திடல்களைச் சரிசெய்ய வேண்டியுள்ளதால் செலவு ஏற்படவிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

ஷம்மி சிவா என்பவரது ராஜிநாமாவைத் தொடர்ந்து தற்போதைய இடைக்கால கமிட்டியை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் உருவாக்கினார்.

இந்தப் புதிய கமிட்டியினர் ஊழல் இல்லாத உள்ளூர் நிர்வாகிகளை நியமிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அதனால், ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த முடியாமல் போய்விட்டதென விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Summary

Sri Lanka Cricket faces estimated revenue loss of USD 20 million

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.