
எங்களால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும்: இலங்கை கேப்டன்
திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தங்களால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
சமாரி அத்தப்பத்து (கோப்புப் படம்)
திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தங்களால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த இரண்டு அணிகளுக்குமான இறுதிப்போட்டி நாளை (செப்டம்பர் 13) துபை சர்வதேசத் திடலில் நடைபெறுகிறது. இந்த நிலையில், தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஹர்ஷிதா மற்றும் கவிஷா இருவரும் மிக அற்புதமாக பேட்டிங் செய்தனர். அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடி அணிக்காக ரன்கள் சேர்த்தனர். அவர்கள் இருவரும் போட்டியை வென்று கொடுத்தனர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இறுதிப்போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினால், எங்களால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என நினைக்கிறேன் என்றார்.
Summary
Sri Lanka captain Chamari Athapaththu has stated that they can defeat any team if they execute their plans correctly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






