சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் கதை முடிந்ததா?

மும்பைக்கு எதிராக மோசமாகத் தோல்வியடைந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி...

News image
Updated On :6 அக்டோபர் 2021, 10:01 am

DIN

மும்பைக்கு எதிராக மோசமாகத் தோல்வியடைந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துவிட்டது. 

சிஎஸ்கேவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி எதிர்பாராத வெற்றியை அடைந்த ராஜஸ்தான் அணி, மும்பைக்கு எதிராக மிகவும் தடுமாறியது. ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. எவின் லூயிஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். நாதன் கோல்டர் நைல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு விளையாடிய மும்பை 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன், 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 

13 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான் அணி.

சரி, அந்த அணிக்கு பிளேஆஃப் வாய்ப்பு இன்னும் உள்ளதா இல்லையா?

மும்பைக்கு எதிராக மோசமாகத் தோற்றதால் இருந்த வாய்ப்புகளையும் இழந்து நிற்கிறது ராஜஸ்தான் அணி. நாளை தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தாவைத் தோற்கடித்தால் பிறகு இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் இருக்கும். மும்பை அணி ஹைதராபாத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தோற்றால் மும்பைக்கும் 12 புள்ளிகள் தான் இருக்கும். இப்படி ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை என மூன்று அணிகளும் சமநிலையில் இருந்தால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ராஜஸ்தானின் நெட் ரன்ரேட் -0.737, மும்பை -0.048, கொல்கத்தா 0.294.

இதுதான் ராஜஸ்தானின் சிக்கலே. கொல்கத்தாவைத் தோற்கடித்தால் மட்டும் போதாது, அதன் நெட் ரன்ரேட்டைத் தாண்ட 125 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லவேண்டும். அதுமட்டுமில்லாமல் கடைசி ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் தோற்க வேண்டும். இவ்வளவும் நடந்தால் தான் பிளேஆஃப் உறுதியாகும். ஆக மொத்தத்தில் ராஜஸ்தான் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற வேண்டுமென்றால் பல அதியசங்கள் நடந்தாக வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.