அதிக ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியும் இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் யார் யார்?
ஐபிஎல் போட்டியில் பல வருடங்களாக விளையாடியும் இந்திய அணிக்குள் நுழைய முடியாத வீரர்களும் இருக்கவே செய்கிறார்கள்.


ஐபிஎல் போட்டியில் விளையாடினால் அதன் வழியாக இந்திய அணிக்குள் நுழைய முடியும் என்பது பல ஆயிரம் இளைஞர்களின் கனவாக உள்ளது.
ஆனால் ஐபிஎல் போட்டியில் பல வருடங்களாக விளையாடியும் இந்திய அணிக்குள் நுழைய முடியாத வீரர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
உதாரணமாக ரஜத் பாட்டியா 95 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியும் இதுவரை இந்திய அணிக்குத் தேர்வாகவில்லை. அதேபோல விக்கெட் கீப்பர் சஹாவால், 134 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியும் இந்திய டி20 அணியில் இடம்பெற முடியவில்லை.
இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
அதிக ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி இந்திய அணிக்குத் தேர்வாகாத வீரர்கள்
95 - ரஜத் பாட்டியா
76 - சித்தார்த் திரிவேதி
68 - ராகுல் திரிபாதி
59 - ஷடாப் ஜகாதி
55 - மிதுன் மன்ஹாஸ்
54 - ராகுல் தெவாதியா
53 - மனன் வோஹ்ரா
அதிக ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி இந்திய டி20 அணிக்குத் தேர்வாகாத வீரர்கள்
134 - சஹா
105 - மயங்க் அகர்வால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...