நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்திய டி20 அணியில் அஸ்வினா?: கேள்வி எழுப்பும் ஸ்ரீகாந்த்

இந்திய டி20 அணியில் அஸ்வின் விளையாடுவது குறித்து எனக்குக் குழப்பமாக உள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 10:08 am

DIN


இந்திய டி20 அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் விளையாடுவது குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் 35 வயது சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் 3-வது டி20 ஆட்டத்தின்போது ஃபேன்கோட் செயலிக்குப் பேட்டியளித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், ஆர். அஸ்வின் குறித்து கூறியதாவது:

இந்திய டி20 அணியில் அஸ்வின் விளையாடுவது குறித்து எனக்குக் குழப்பமாக உள்ளது. இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடாத அஸ்வின், மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் எப்படி விளையாடுகிறார்? எங்கள் அனைவருக்கும் இது குழப்பமாக உள்ளது. ஏனெனில் உங்களுடைய முதல் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா, அடுத்த சுழற்பந்து வீச்சாளர் சஹால் அல்லது அக்‌ஷர் படேல் அல்லது அஸ்வின் அல்லது ஒரு மாற்று வீரர். இந்த நான்கு பேரில் இருவர் மட்டுமே (உலகக் கோப்பை) அணியில் இடம்பிடிப்பார்கள். ஆல்ரவுண்டர் திறமையால் அஸ்வின் தேர்வாகியிருக்கலாம்.  லெக் ஸ்பின்னர் என்பதால் சஹால் தான் என்னுடைய முதல் தேர்வு என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எகானமி - 6.66. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.