மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நியூசி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றி பெறும் நிலையில் தென்னாப்பிரிக்க அணி (ஹைலைட்ஸ் விடியோ)

கடைசி நாளில் இந்த டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்வதற்கான வாய்ப்புகள் தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகமாக உள்ளன. 

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 11:53 am

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தோல்வியடையும் நிலையில் உள்ளது நியூசிலாந்து அணி. 4-ம் நாள் முடிவில் அந்த அணி, 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 133 ஓவர்களில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எர்வீ 108 ரன்கள் எடுத்தார். மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் 60, காலின் டி கிராண்ட்ஹோம் 120 ரன்கள் எடுத்தார்கள். ரபாடா 5 விக்கெட்டுகளையும் யான்சென் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

தென்னாப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 100 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் கைல் வெர்ரீன் 136 ரன்களும் ரபாடா 47 ரன்களும் எடுத்தார்கள். இதனால் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை வெல்ல நியூசிலாந்து அணிக்கு 426 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த அணி 4-ம் நாள் முடிவில் 42 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கான்வே 60 ரன்களுடனும் டாம் பிளெண்டல் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். ரபாடா, மஹாராஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 2-வது டெஸ்டில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்குக் கைவசம் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 332 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் கடைசி நாளில் இந்த டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்வதற்கான வாய்ப்புகள் தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகமாக உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.