/

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவைச் சந்தித்த சிவகார்த்திகேயன் (படங்கள்)

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:50 am

DIN

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் செர்பியாவில் நடைபெற்ற பாரசின் ஓபன் செஸ் போட்டியை வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா. அதற்கு முன்பு, நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில் போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றார். சமீபத்தில் உலக சாம்பியன் கார்ல்சனை இருமுறை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. அடுத்ததாக சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவர் பங்கேற்கிறார். 

பிரக்ஞானந்தா, கார்ல்சனைச் சமீபத்தில் வென்றபோது அவரை வாழ்த்தினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சென்னையில் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இதுகுறித்து ட்விட்டரில் தகவலைப் பகிர்ந்த பிரக்ஞானந்தா, இருவருடைய சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். உன்னைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தம்பி என சிவகார்த்திகேயனும் இதற்கு ட்வீட் செய்துள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.