அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு!

மிட்செல் 53, நீஷம் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

News image
கான்வே - வில்லியம்சன்
Updated On :9 நவம்பர் 2022, 9:54 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது நியூசிலாந்து அணி. 

சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது நியூசிலாந்து அணி.  இரு அணிகளிலும் மாற்றம் எதுவுமில்லை. இந்த டி20 உலகக் கோப்பையில் சிட்னியில் முதலில் பேட்டிங் செய்த 6 அணிகளில் 5 அணிகளுக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. இன்று மழை அறிகுறி எதுவும் இல்லாததால் பரபரப்பான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். 

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஃபின் ஆலனை முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்கச் செய்தார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் ஆலன். அடுத்தப் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார். ஆனால் பந்து, பேட்டில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டதால் டிஆர்எஸ் முறையீட்டின் வழியாகத் தப்பித்தார் ஆலன். ஆனால் அடுத்தப் பந்திலும் எல்பிடபிள்யூ ஆனார் ஆலன். டிஆர்எஸ் முறையீடு இந்த முறை உதவவில்லை. இதனால் முதல் ஓவரிலே ஃபின் ஆலனை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அருமையான தொடக்கத்தை அளித்தார் ஷாஹீன் அப்ரிடி.

Story image

முதல் 6 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்தது. கான்வே 21 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். பிறகு கிளென் பிளிப்ஸை 6 ரன்களுக்கு வீழ்த்தி அசத்தினார் நவாஸ். இதனால் நியூசிலாந்து அணி தடுமாறியது. அதன்பிறகு நல்ல கூட்டணி அமைத்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் வில்லியம்சனும் டேரில் மிட்செல்லும் பார்த்துக்கொண்டார்கள். 17-வது ஓவரில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் வில்லியம்சன். அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தி 32 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் மிட்செல். 

நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 53, நீஷம் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.