ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

சிக்கலில் ஜிம்பாப்வே அணி: 165 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

Published On :

சூப்பர் சிக்ஸஸ் ஆட்டத்தில் நேற்றையப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் ஸ்காட்லாந்திடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. மேற்கிந்தியத் தீவுகள் போட்டியிலிருந்து வெளியேறியதால் இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்காக கடும் போட்டி நிலவுகிறது.  

முதல் ஓவரிலேயா ஜிம்பாப்வே அணியினர் விக்கெட்டை இழந்தனர். அடுத்து கேப்டன் வில்லியம்ஸ் சிக்கந்தர் ராஸா ஜோடி ஓரளவுக்கு நல்ல பார்ட்னட்ஷிப் அமைத்தனர். இருப்பினும் வில்லியம்ஸ் 56 ரன்களுக்கும் சிக்கந்தர் ராஸா 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் வந்த பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  32.2 ஓவரில் ஆல் அவுட் ஆன ஜிம்பாப்வே வெறும் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இலங்கை அணி தரப்பில் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளும் மது ஷனகா 3 விக்கெட்டுகளும் பதிரானா 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர். இலங்கை அணி 13 ஓவரில் விக்கட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்துள்ளது. 

ஜிம்பாப்வே உடனான இன்றையப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் உலகக் கோப்பைக்கு எளிதில் 8 புள்ளிகளுடன் தகுதி பெற்று விடும். ரன் ரேட் குறைவாக உள்ளதால் இன்றையப் போட்டியில் இலங்கையை வீழ்த்தினாலும் ஜிம்பாப்வே அணியின் ரன் ரேட்டில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தால் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விடும். இதனால் ஜிம்பாப்வே அணி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.