நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

இவர் தான் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனா?

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

தில்லி அணி

Updated On :23 பிப்ரவரி 2023, 4:43 pm IST


தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2022 போட்டியை பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வென்றது. மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமும் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது. சென்னை, ஆமதாபாத், மொஹலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.     

குரூப் ஏ பிரிவில் மும்பை, கேகேஆர், ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 3 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. 

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தில்லி அணியின் கேப்டனாக ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார். இதனால் புதிய கேப்டனைத் தேர்வு செய்யும் நிலையில் உள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி.  கேப்டனாக வார்னரும் துணை கேப்டனாக அக்‌ஷர் படேலும் தேர்வாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2016-ல் ஐபிஎல் போட்டியை சன்ரைசர்ஸ் வென்றபோது அந்த அணியின் கேப்டனாக இருந்தார் வார்னர். 

Story image

Related Article

உமேஷ் யாதவின் தந்தை காலமானார்

டி20 உலகக் கோப்பை: பிரபல இந்திய வீராங்கனை விலகல்!

டிஎன்பிஎல் ஏலத்தில் பங்கேற்ற அஸ்வின்!

டபிள்யூபிஎல்: லக்னெள அணியின் கேப்டன் அறிவிப்பு

சிஎஸ்கேவுக்குப் பாதிப்பு?: அயர்லாந்து டெஸ்டில் பங்கேற்க ஸ்டோக்ஸ் முடிவு!

இந்திய ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.