புதிய உலக சாதனையை நிகழ்த்துவாரா ஹசரங்கா?
By DIN | Published On : 27th June 2023 04:51 PM | Last Updated : 27th June 2023 04:57 PM | அ+அ அ- |

படம் : ட்விட்டர் | ஹசரங்கா
இந்தியாவில் வரும் அக்டோபா் 5 முதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கு தேர்வாக இரண்டு அணிகளுக்கு உண்டான 8 அணிகள் பங்கேற்றுவரும் தகுதி சுற்றுப் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையை சேர்ந்த வனிந்து ஹசரங்கா தொடர்ந்து 3 போட்டிகளில் தலா 5 (5/79, 6/42, 5/13) விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தொடர்ந்து மொத்தம் 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு!
எந்த ஸ்பின்னரும் இதற்குமுன் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை. ஆனால் பாகிஸ்தான் ஜாம்பவான் வாக்கர் யூனிஸ் (5/11, 5/16, 5/52) இதை முன்னமே நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிக்க: 2343 நாள்கள் முதலிடத்தில் இருந்த ஒரே பந்து வீச்சாளர்: ஸ்டெயின் பிறந்தநாளில் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இன்று நடைபெற்றுவரும் ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில் மிண்டும் 5 விக்கெட்டுகளை எடுத்தால் ஹசரங்கா புதிய உலக சாதனையை நிகழ்த்துவார்.
இலங்கை 50 ஓவர் முடிவில் 245க்கு ஆல் அவுட் ஆனது. தற்போது ஸ்காட்லாந்து விளையாடி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...