180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹாரி டிக்ஸான் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஆலிவர் பீக் 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர். இதனால் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு இக்கட்டான சூழல் உருவானது. 164 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 16 ரன்களும், பாகிஸ்தான் வெற்றி பெற ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது.