
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
குரேசியா அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 900ஆவது கோலை 34ஆவது நிமிடத்தில் அடித்து அசத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு , “சாதனைகளை நான் பின் தொடர்வதில்லை; சாதனைகள்தான் என்னைப் பின் தொடர்கிறது. இந்தக் கனவைக் கண்டேன், இதுபோல் இன்னும் அதிகமான கனவுகள் இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக நேர்காணல் ஒன்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எனது கோல்களுக்கு விடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி லெஜெண்ட் பீலேவை கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.