தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

'தீபாவளி ஊக்கத் தொகையாக பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்'

தீபாவளி ஊக்கத் தொகையாக பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

கூட்டத்தில் பேசுகிறார் தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் பி.வாசு .

Updated On :1 நவம்பர் 2020, 11:38 am

மன்னார்குடி: கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோயில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டும் வகையில், தலா ரூபாய் 5 ஆயிரம் கோயில் நிதியிலிருந்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாரூர், தஞ்சை மாவட்ட கோயில் பூசாரிகள் நலச் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி.சேட்டு, மாவட்ட துணைத் தலைவர் என்.கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கோயில் பூசாரிகள் நலவாரியத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பூசாரிகளுக்கு மாதம் ரூபாய் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பினை உடனடியாக அரசாணையாக வெளியிடுவதுடன், முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். கிராமபுற பூசாரிகளுக்கு மாவட்டம் தோறும் வழிபாட்டு பயிற்சி முகாம் நடைபெற வேண்டும்.

கரோனா கால பொதுமுடக்கத்தினால் கோயில் திருவிழாக்கள் தடை ஏற்பட்டுள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து தட்டுக் காணிக்கை நம்பியே வாழ்வாதாரமாக கொண்ட பூசாரிகள், அர்ச்சகர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் அவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் கோயில் நிதியிலிருந்து தலா ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு கலந்துகொண்டனர். இதில் மாநில பொருளாளர் கே.சுந்தரம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.