திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

யானைகள் இறப்பு வழக்கு: சிபிஐ விசாரிக்க உத்தரவு

தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)

Published On :

தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதாகவும், தோல் உள்ளிட்டவற்றிற்காக விலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது யானைகள் தந்தங்களுக்காக கடத்தப்படுவது, சர்வதேச சந்தையாக வளர்ந்துள்ளது. தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது ஏற்கத்தக்கதல்ல. யானைகளை பாதுகாப்பது நமது கடமை. 

தந்தங்களுக்காக யானையை வேட்டையாடுபவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளனர். இதனால், யானைகள் இறப்பது குறித்து தமிழகத்தைத் தாண்டிய விசாரணை அவசியமாகிறது.

எனவே தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.