மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

ஒலிம்பிக் தங்கம் இலக்கு... தமிழகம் முழுவதும் 10 சிறப்பு பயிற்சி மையங்கள்!

தமிழ்நாடு முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் நிறுவப்படுவது பற்றி..

tnassembly

அமைச்சர் மரிய வில்சன் - tnassembly

Published On :

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதற்காக தமிழ்நாடு முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு பயிற்சி மையங்கள் நிறுவப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். அதில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உச்சத்திற்குக் கொண்டுசெல்ல அரசு உறுதி பூண்டுள்ளது.

சிறந்த திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக, 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்டு, இதற்காக ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

விளையாட்டில் ஆர்வமும், திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதிற்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்கக் கூடுதலாக ரூ. 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்குக் கொண்டுசெல்லும் தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ. 42 கோடியும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்புகளை ரூ. 2 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.