சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

விருதுநகர் அருகே சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி பலி

விருதுநகர் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி பலியாகினர்.

News image
விருதுநகர் அருகே சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி பலி
Updated On :1 பிப்ரவரி 2024, 9:45 am

DIN


விருதுநகர் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி பலியாகினர். அவர்களது இரண்டு குழந்தைகள் லேசான காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (30).இவர் அங்குள்ள  பிரபல புல்லட் கம்பெனியில்  மேலாளராக  பணிபுரிகிறார். மனோஜ், மற்றும் நித்திஷா(27) அவர்களது இரு குழந்தைகளான ஜெனிஷா ஸ்ரீ (வயது 9), பிரணவ் ஆதித்யா  (வயது 8) ஆகியோருடன் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே  சென்றுகொண்டிருந்த போது கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, கார் மீது மோதியதில் பயங்கர விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் மனோஜ், நித்திஷா தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களது குழந்தைகள் ஜெனிஷா ஸ்ரீ (வயது 9), பிரணவ் ஆதித்யா  (வயது 8) இருவரும் லேசான காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.