சென்னை: உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், தனது விடுதலைக்கு பேருதவியாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சென்னை வந்த பேரறிவாளன், தனது தாய் மற்றும் தந்தையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் நேரில் சந்தித்தார்.
இதையும் படிக்க.. 'அவ்விய நெஞ்சத்தான்..' திருக்குறளுடன் பேசத் தொடங்கிய பேரறிவாளன்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் வழக்கில் மத்திய அரசின் தரப்பிலும், தமிழக அரசின் தரப்பிலும் பரஸ்பரம் வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. மன்னிப்புடன் ஆரம்பித்து நன்றியுடன் முடித்த அற்புதம்மாள்
36 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பை இன்று அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை எந்த அடிப்படையில் விடுதலை செய்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, மாநில அமைச்சரவை முழுமையாக விசாரித்த பிறகே பேரறிவாளனை விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளது.
ஆனால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறு, மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநர் முடிவுக்கே அனுப்ப நாங்கள் விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க 142 சட்டப்பிரிவு வழி வகுகிறது என்று தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

50 ஆண்டுகால தோ்தல் வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக குறைந்த அதிமுக வாக்கு வங்கி!
20%-ஆக குறைந்த அதிமுக வாக்கு வங்கி! 50 ஆண்டுகால தோ்தல் வரலாற்றில் மூன்றாம் முறை

இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


