எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36-வது நினைவுதினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிக்க | ஆழிப்பேரலையில் அழிந்த தனுஷ்கோடி: இன்று 59-ஆவது ஆண்டு நினைவு நாள்
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஏழை எளிய மக்களின் வலிகள் அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தன்னலமற்ற தனித் தலைவர், என்றும் கோடிக்கணக்கான தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழும் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இதயம் முரளி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பொருந்தும்: உச்சநீதிமன்றம்

இந்திய அளவில் ரூ. 300 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன் திரைப்படம்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



