சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதித்துறை செயலாளர் தலைமையில் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் குழவில் இடம் பெறுவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து, கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு முடிவெடுக்கும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், தங்களது குடும்பத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு
இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கும் பரமேஸ்வரி ரெட்டி!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு தூக்கு தண்டனை!

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸ்... பாஜகவுக்கு பின்னடைவு!

தவெக, தவெக... என பள்ளி மாணவர்கள் கோஷம்! விடியோவால் மீண்டும் சர்ச்சை!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



