பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டியை ஓட்டிய எடப்பாடி பழனிசாமி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டியை ஓட்டிய எடப்பாடி பழனிசாமி!

பொங்கல் பண்டிகையை ஒட்டி இரட்டை மாட்டு வண்டியை ஓட்டிய எடப்பாடி பழனிசாமி கிராம மக்களுடன் இணைந்து 108 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
Published on


பொங்கல் பண்டிகையை ஒட்டி இரட்டை மாட்டு வண்டியை ஓட்டிய எடப்பாடி பழனிசாமி கிராம மக்களுடன் இணைந்து 108 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு நன்மை செய்யாமல் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது திமுக, கொள்ளையடித்த சிலர் சிறையில் உள்ளனர்; இன்னும் சிலர் சிறைக்கு செல்வார்கள் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த திண்டமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். முன்னதாக, தொண்டர்கள் சூழ எடப்பாடி பழனிசாமி இரட்டை மாட்டு வண்டியை ஓட்டி விழா மைதானத்திற்கு வந்தார் . தொடர்ந்து 108 பானைகளில் பெண்கள் பொங்கல் வைக்க, அவர்களுடன் தானும் பொங்கல் வைத்து வழிப்பட்டார்.

பின்னர் பொங்கல் விழாவில் உரையாற்றிய அவர், தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பதை போல் இந்த ஆண்டு மக்களுக்கு நல்வழி பிறக்கும்;   ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகாலத்தில் திமுக மக்களுக்கு நன்மை செய்யாமல் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். கொள்ளையடித்த அமைச்சர்கள் பலர் சிறை சென்றுவிட்டனர்; மேலும் சிலரும் சிறை செல்ல உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு முத்து முத்தான திட்டங்கள் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் புதிய திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. கொரோனா பேரிடர் கால சோதனையை கூட சாதனைகளாக மாற்றி மக்களுக்கு 11 மாதங்கள் ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை நிறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

கஜா, வர்தா புயலால் கடுமையான சேதத்திலும் மக்களை காப்பற்றினோம். நிக்ஜாம், தென் மாவட்ட பெருமழையில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகூட கிடைக்கவில்லை. அதிமுகவை பொறுத்தவரை திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காப்பற்றினோம்.” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com