டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய பாடலின் புரோமோ வெளியானது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள டிராகன் படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில் ’ஏன் டி விட்டுப் போன’ என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். இந்தப் பாடலின் புரோமோ விடியோவை டிராகன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதுவரையில், நடிகர் சிலம்பரசன் குரலில் வெளியான பாடல்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையே பெற்றுள்ளன. நடிகர் சிலம்பரசன் குரலில், குறிப்பாக காதல் தோல்வி பாடல் என்பதால், டிராகன் படம் மீதான ஆவல் அதிகரிப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Seeing you in a video will make your fans happy . Thank you STR for being so humble and lovable â¥ï¸ a small thing that we could do to start your birthday celebration ð¥
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) January 26, 2025
Guys â En de vittu ponnaâ in his voice is going to be magical bringing back vintage vibes â¥ï¸#Dragon⦠pic.twitter.com/84BETfH0MX
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், மரியம் ஜார்ஜ், சித்ரா, விஜே சித்து, ஹர்ஷத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டிராகன் படம் காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் தேதியில்தான் வெளியிடப்படவிருப்பதாக முதலில் அறிவித்தனர். ஆனால், நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதியில் வெளியிடப்படவிருப்பதால், டிராகன் படத்தின் தேதியை பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக டிராகன் படக்குழுவினர் அறிவித்தனர்.
மேலும், நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் பிப்ரவரி 21 ஆம் தேதியில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எம்புரான் டீசர் வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் சூர்யா பாடிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2-வது பாடலின் புரோமோ!

ஹாய் படத்தில் அனிருத் பாடிய ‘ரசகுல்லா’ பாடல்!

செங்காத்தியே பாடல் வெளியானது!
ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல்! புரோமோ வெளியீடு!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



