வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும் தீரமும் வரலாற்றில் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும்: முதல்வர் விஜய்
வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும் தீரமும் தமிழர் வரலாற்றில் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும் என முதல்வர் விஜய் கூறியது குறித்து...
வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளில், அவரது தியாகமும் தீரமும் தமிழர் வரலாற்றில் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும் என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளில் முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது, "ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில், அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்.
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவும், உரிமைகளைக் காக்கும் உறுதியும், தாய்மண்ணைப் போற்றும் உணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கை வரலாற்றுப் பாடமாகத் திகழ்கிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும், தீரமும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
CM Vijay pays tribute on the death anniversary of Veerapandiya Kattabomman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

