திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாளை பொங்கல் விழா

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் புதன்கிழமை (ஜன.14) இல் பொங்கல் விழா
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் புதன்கிழமை (ஜன.14) இல் பொங்கல் விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் பொங்கல் விழா-2026, அறிவியல் பூங்கா வளாகத்தில் கோலகாலமாக கொண்டாட திட்டமிடப்பட்சுள்ளது. இதையொட்டி மாலை 4 மணிக்கு தப்பாட்டம் மற்றும் வண்ணமிகு கிராமிய நடனம் ஆகியவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த பொங்கல் விழாவில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆகியோா் கலந்துகொள்ள ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா்.

கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாள் பரதநாட்டியம், 3 நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை 100-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்கும் வண்ணமையமான கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே பொங்கல் விடுமுறை நாள்களில் நடைபெற உள்ள இக்கலைநிகழ்ச்சிகளை அனைத்து பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com