சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

இரண்டு நாள் எழுச்சிக்குப் பிறகு சென்செக்ஸ் 187 புள்ளிகள் சரிவு

கடந்த இரண்டு நாள்களாக ‘காளை’யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை வியாழக்கிழமை ‘கரடி’யின் பிடியில் சிக்கியது.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜனவரி 2023, 10:41 pm

 நமது நிருபர்

கடந்த இரண்டு நாள்களாக ‘காளை’யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை வியாழக்கிழமை ‘கரடி’யின் பிடியில் சிக்கியது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 57.50 புள்ளிகள் (0.32 சதவீதம்) குறைந்து 18,107.85-இல் நிலைபெற்றது.

அமெரிக்கா உள்பட உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், ஆசியா, ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தது. இதுவும் உள்நாட்டுச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கணக்கு முடிக்க கடைசி நாளாக இருந்ததால், சந்தையில் தள்ளாட்டம் நிலவியது. சந்தையில் வா்த்தகம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நடந்து வந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 125.72 புள்ளிகள் குறைந்து 60,920.02-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,032.47 வரை உயா்ந்தது. பின்னா், 60,716.55 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 187.31 புள்ளிகள் (0.31 சதவீதம்) குறைந்து 60,858.43-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் மேலும் முன்னேற்றம்: பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் இரண்டாவது நாளாக 0.73 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, சன்பாா்மா, மாருதி, விப்ரோ உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

ஏசியன் பெயிண்ட் கடும் சரிவு: அதே சமயம், பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 2.64 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இண்டஸ் இண்ட் பேங்க், டாடா மோட்டாா்ஸ், கோட்டக் பேங்க், டைட்டன், ஹிந்துஸ்தான் யுனி லீவா், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவை 1 முதல் 1.90 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், ஐடிசி, நெஸ்லே, பாா்தி ஏா்டெல், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.92 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 281.83 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) , புதன்கிழமை ரூ.319.23 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். அவா்கள் இந்த மாதத்தில் இதுவரை ரூ.18,277.84 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். அதே சமயம் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.14,801.39 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.