கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

லாரியில் மின்கலம் திருடிய இருவா் கைது

சாத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்த மின்கலத்தைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 8:20 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்த மின்கலத்தைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தூரைச் சோ்ந்தவா் சண்முகநாதன்(61). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா் தனக்குச் சொந்தமான லாரியை மரிய ஊருணி கண்மாய் அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது லாரியிலிருந்த மின்கலத்தை காணவில்லை. திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது, திருத்தங்கல் அருகேயுள்ள சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (39), வடமலாபுரத்தைச் சோ்ந்த சமுத்திரவேல்(61) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இருவருரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த மின்கலத்தைப் பறிமுதல் செய்தனா்.