வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்பின்னர், ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துவிடுங்கள். 8 மணி நேரத்துக்குப் பின்னர் அதனைப் பார்த்தால் நன்கு முளை கட்டியிருக்கும். வெந்தயத்தை நேரடியாக உணவுப் பொருளில் சேர்த்தால், கசப்பாக இருக்கும். ஆனால், முளை கட்டி சாப்பிட்டால் கசப்பு சுவையே தெரியாது.
இவ்வாறு சாப்பிடுவதால் நல்ல பயன்கள் கிடைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. தொடர்ந்து முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டுவர சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிடும். மேலும், இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிறு வலி, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும். நரம்புகளைப் பலப்படுத்தும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு. வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம். இல்லையெனில், தலைமுடியை அலசுவதற்குப் பயன்படுத்தலாம். வெந்தயத்தை அரைத்தும் தலைக்குத் தேய்த்துக் குளிக்க முடி கருமையாக இருக்கும், நன்றாகவும் வளரும்.
வெந்தயத்தை முளை கட்டி சாப்பிட முடியாதவர்கள் அதை வறுத்து அரைத்து வெந்தயப் பொடியாக பால் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கும் பரமேஸ்வரி ரெட்டி!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு தூக்கு தண்டனை!

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸ்... பாஜகவுக்கு பின்னடைவு!

தவெக, தவெக... என பள்ளி மாணவர்கள் கோஷம்! விடியோவால் மீண்டும் சர்ச்சை!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



