துவாபர யுகத்தில் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணனாக அவதரிக்கிறார். கிருஷ்ணனும் மூத்த சகோதரராகிய பலராமனும் உரிய பருவத்தில் கல்வி கற்பதற்காக "ஸாந்தீபநி' என்ற குருவிடம் குருகுல வாசம் செய்யத் தொடங்கினர். பலராமனும், கிருஷ்ணனும் "கற்பூர புத்தி' உடையவர்களாய், ஒரே ஒருமுறை குருவால் உபதேசிக்கப்பட்ட அனைத்து வித்தைகளையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, அப்படியே திருப்பிச் சொல்லுவர். 64 நாள்களில் 64 கலைகளையும் ஐயந்திரிபறக் கற்றுக் கொண்டனராம். "ஆய கலைகள் அறுபத்து நான்கனையும் ஏய உணர்விக்கும் என்னம்மை' என்று கலைவாணியின் புகழ் பாடினார் (சரஸ்வதி அந்தாதி) கம்பர்.
64 கலைகளைப் பற்றி வடமொழியில் "சைவ தந்த்ரம்' எனும் நூல் விளக்குகிறது. சைவ பரமாகவோ அல்லது வைணவ பரமாகவோ எழுதப்பட்ட சில நூல்களில் 64 என்ற எண்ணிக்கையில் மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், கலைகளின் பெயர்களில் சிற்சில மாற்றங்கள் காணப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகக் கீழ்த்திசை சுவடிப் புலத்தில், வடமொழியில் எழுதப்பட்ட சைவ தந்த்ரம் எனும் ஓர் ஓலைச் சுவடிக்கட்டு உள்ளது. அஃது அத்வைத பரமானது. அந்நூல் சிவலிங்க வழிபாட்டு முறையை உள்ளடக்கியது. அச்சுவடித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 64 கலைகளின் பெயர்ப்பட்டியல் பின்வருமாறு:
1. இராகத்துடன் பாடுதல், 2. இசைக் கருவிகளை இயக்குதல், 3. நாட்டியம், 4. நடிப்பது - அபிநயம் பிடித்தல், விகடம் செய்தல், 5. படம் வரைதல் - வர்ணம் பூசுதல், 6. தொய்யில் எழுதுதல் - உடலின் பல பாகங்களில் கலவை, வாசனைப் பொடிகளால் எழுதுவது, 7. வழிபாட்டுக்காக பல வகைகளில் மாவு, பூக்களைக்கொண்டு அலங்காரம் செய்வது, 8. மலர்ப்படுக்கை செய்வது, 9. கற்களுக்கும், உடல் அங்கங்களுக்கும், ஆடைகளுக்கும் வண்ணம் பூசுதல், 10. உயர்ந்த கற்களைக் கொண்டு தரை அமைப்பது, 11. படுக்கை தயார் செய்வது, 12. பானையில் நீர் நிரப்பி இசைக் கருவியாக்கி, இசை எழுப்புவது(ஜலதரங்கம்), நீரில் நடக்கப் படி அமைப்பது, 13. மாயா ஜாலங்களை நிகழ்த்திக் காட்டுவது, 14. மாலை, தோரணங்கள் அமைப்பது, 15. மலர் அலங்காரம் செய்வது, 16. உடைகளாலும், ஆபரணங்களாலும் உடலை அழகுபடுத்துதல், 17. தேர் போன்ற வாகனங்களின் பலவித அழகுமிக்க வர்ணங்கள் பூசுவது, 18. பலவித வாசனைப் பொருள்கள் தயாரித்து உடைகள் தயார் செய்வது, 19. ஆபரணங்கள் செய்வது, 20. கண்கட்டு வித்தை, 21. மாறுவேடம் அணிவிப்பது, 22. கை லாகவங்கள் காண்பிப்பது, 23. சமையல் கலை, 24. மதுபானங்களைத் தயாரித்தல், 25. பலவிதமான நெசவுக் கலைகள் மற்றும் தைக்கும் வேலைகள், 26. நூல்களைக் கொண்டு கட்டி பொம்மை தயாரித்தல், 27. இசைக் கருவிகளைத் தயாரித்தல், 28. புதிர்களை விடுவித்தல், 29. செய்யுள் இயற்றுதல், 30. வேடிக்கையாகப் பேசுதல், 31. கையெழுத்துப் பிரதிகளை எளிதாகவும் வேகமாகவும் படித்தல், 32. நாடகம் மற்றும் கதை எழுதுதல், 33. பூர்த்தியடையாத வரிகளை நிரப்பிப் பூர்த்தி செய்தல், 34. பிரம்பு, நார், வில் வேலைகள் செய்தல், 35. நூல் சுற்றும் கலை, 36. தச்சு வேலை, 37. சிற்ப சாஸ்திரம், 38. விலை மிகுந்த உலோகங்களையும், இரத்தினக் கற்களையும் சோதிப்பது, 39. இரசவாதக் கலை, 40. இரத்தினக் கற்களில் நிறம் ஏற்றுவது, 41. பூமிக்குள்ளே மறைந்து கிடக்கும் பொருள்களை அறிதல், 42. தோட்டக்கலை, 43. ஆட்டுச் சண்டை, சேவல் சண்டை, காடை சண்டை முதலிய விளையாட்டுகளை ஏற்படுத்துவது, 44. கிளி, பறவைகளை - மனிதர்களைப் போலப் பேசப் பழக்குதல், 45. எதிரிகளைத் துரத்த மாந்தீரிக வசீகரம் செய்தல், 46. சிகை அலங்காரக் கலை, 47. ஒருவருக்கும் கண்படாமல் கடிதங்களின் வரிகளைப் படித்தல், 48. கைரேகையில் உள்ள குறிப்புகளைப் படிப்பது, 49. காட்டுவாசிகளின் மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களைப் படிக்கும் கலை, 50. சகுனங்களைப் பற்றிய அறிவு, 51. பூஜிக்க - தொழுவதற்குத் தகுந்த பலவிதமான எழுத்துகளை ஸýத்ரம் - பீஜம் மூலம் வடிவமைப்பது, 52. வைரம் முதலான கற்களின் நீரோட்டத்தைச் சோதித்து அவற்றைத் தரம் பிரிப்பது, 53. பிறர் மனத்தில் ஓடும் எண்ணங்களைப் படித்து அவ்வெண்ணங்களை எழுத்து மூலம் வடிப்பது, 54. அகராதியை உருவாக்குவது, 55. யாப்பிலக்கணத்தினை நன்கு கற்று பிறருக்குப் புரியும்படி எளிமையாக விளக்குவது, 56. ஒரு பொருளைப் பலவிதமாக ஆக்குதல், 57. தந்திரங்களைக் கையாள்வது, 58. உயர்ந்த விதமாகத் தயாரிக்கப்பட்ட ஒருவரின் உடைகளை மேலும் மேம்பட ஆக்குவது, 59. சதுரங்கம், சொக்கட்டான் விளையாட்டுகளில் காய்களை நகர்த்துவது, 60. வெகுதூரம் இருக்கும் பொருள்களை மந்திர வலிமையால் தன்பக்கம் இழுப்பது, 61. குழந்தை விளையாட்டுகளை விளையாடுதல், 62 வசீகரம் செய்யும் மாந்த்ரீகக் கலை, 63. வாதத்திற்குச் சென்று, வெற்றி பெறுவதற்கு முன்பே ஏற்படும் அறிவு, 64. பேய், பிசாசுகளை அடக்கி, அவற்றை விரட்டியடிக்கும் கலை ஆகியவை.
சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட (1899) அபிதான சிந்தாமணி எனும் கலைக்களஞ்சியத்தில் "கலைஞானம்' எனும் சொல்லுக்கு விளக்கமாக 64 கலைகள் தரப்பட்டுள்ளன. சைவ தந்த்ரம் எனும் வடமொழி நூல் காட்டும் 64 கலைகளிலிருந்து சற்று வேறுபட்ட விளக்கங்களை அபிதான சிந்தாமணி (ப.371) தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


