தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

நாச்சியார் பாசுரங்களில் நயமிகு கலைகள்

ஆண்டாள் நாச்சியார் பாடல்களில் அமைந்துள்ள கலையுணர்வு மிகுந்த சில பகுதிகள், படிப்போரை மெய்சிலிர்க்க வைக்கும். அவற்றுள் சில:

News image
Updated On :22 ஜூலை 2017, 10:07 pm

ஆண்டாள் நாச்சியார் பாடல்களில் அமைந்துள்ள கலையுணர்வு மிகுந்த சில பகுதிகள், படிப்போரை மெய்சிலிர்க்க வைக்கும். அவற்றுள் சில:

ஓவியக் கலை: "சித்திரமும் கைப் பழக்கம்' என்பது முதுமொழி. நம் முன்னோர் சுவர், திரைச்சீலைகள் ஆகியவற்றில் எவ்வாறு அழகான வண்ண ஓவியங்களைத் தீட்டி மகிழ்ந்தனர் என்பதை சங்கப் பாடல்கள், மணிமேகலை வாயிலாக உய்த்துணரலாம். ஆண்டாள் நோற்ற காமன் நோன்பில்,

"சுவரில் புராண! நின்பேர் எழுதிச் சுறவ
÷நற்கொடிகளும் சுரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித்
தந்தேன் கண்டாய் காமதேவா!' (பா. 507)

என்று காமனுக்குச் சுவரில் ஓவியங்கள் வரைந்து வழிபாடு இயற்றியதைக் குறிப்பிடுகிறார். ஓவியங்கள் வரைவதற்கு மலர்க்கணைகளும் பயன்பட்டன. கோவலனுக்கு மாதவி எழுதிய மடல்களுக்குப் "பித்திகைக் கொழுமுகை' எழுத்தாணியாகப் பயன்பட்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

"கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி' (பா. 505)
"கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி' (பா. 506)

எனும் பாசுரங்கள் வழி, பூங்கணைகளைப் பயன்படுத்தி சுவரில் ஓவியங்களை எழுதியதாக ஆண்டாள் தெளிவுபடுத்துகிறார். புறச்சுவரில் ஓவியம் தீட்டுவதுடன், அகச்சுவரிலும் அதாவது உள்ளக்கிழியிலும், அடியார்கள் எம்பெருமானின் (திருமால்) திருவுருவை, அப்படியே பதித்துக் கொண்டனர் என்று பெரியாழ்வார் தன்னிலை விளக்கமாக ஒரு பாடலில் (பெரி.திருமொழி, பா. 468) பாடியுள்ளார்.
சிற்பக் கலை: கோதை நாச்சியாரின் திருமொழியில் வார்ப்புச் சிலைகள் செய்யும் முறை, குறிப்பால் உணர்த்தப்படுகிறது. எம்பெருமான் தன் உடல்நலத்தைக் கெüவிக்கொண்டு, தன்னை எவ்வாறு உருக்குலையச் செய்தான் என்பதை உளமுருகப் பாடுகையில்,

"மழையே மழையே மண்புறம் பூசி...
மெழுகு ஊற்றினார் போல்' (பா. 604)

என்று பாடுகிறார். வார்ப்பு உருவ வெண்கலச் சிலைகள் செய்யப்படும்போது, அவ்வுருவங்களின் புறத்தே மண்பூச்சும், உள்ளே மெழுகுப் பூச்சும் பூசப்படும். மெழுகிற்கும் மண்பூச்சிற்கும் இடையே உருக்கப்பட்ட வெண்கலம் (திரவ வடிவில்) ஊற்றப்படும். பின் ஓர் ஊசித் துவாரத்தின் மூலம், உள்ளேயிருக்கும் மெழுகை வெளியேற்றுவர். இப்பாசுர அடிகள் மூலம் ஆண்டாள் நாச்சியாரின் அறிவியல் புலமையும் நன்கு வெளிப்படுகிறது.
நாடகக் கலை: நடனம், நடித்தல் எனும் நாட்டியக் கலைக்குரிய சொற்களைத் தம்முடைய பாசுரங்களில் கோதை நாச்சியார் பலவகையாகப் பயன்படுத்தி
யுள்ளார்.

"வாய்த்த காளியன் மேல் நடமாடிய' (பா. 537); "குதிகொண்டு அரவில் நடித்தாய்' (பா. 525); "நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள்' (பா. 603) என்று ஆண்டாள் கண்ணனுடைய நடனத்தையும், மயிலின் தோகை விரித்தாடுகின்ற தன்மையையும் கூறுவதால், அவர் காலத்தில் நடனக்கலை நன்கு சிறப்புற்றிருந்ததை அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.